ஃபர்ஸ்ட் சிங்கிள்
டான் படத்தின் வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வரும் திரைப்படம் ‘பிரின்ஸ்’. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ரியா போஷாப்கா கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் ‘பிம்பிலிக்கி பிலாப்பி’ என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
Here is the first single from #PRINCE 🇮🇳🕊🇬🇧
A @MusicThaman musical 🥁
Sung by my dearest @anirudhofficial ♥️
✍️ @Lyricist_Vivek
🕺 @shobimaster
Thank u @dop_gkvishnu for shooting this song😊#BimbilikkiPilapiTamil –https://t.co/zpqpxIES1y
Telugu – https://t.co/xAnzHGfqQX
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 1, 2022

