ஃபர்ஸ்ட் லுக்
பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதனைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான ‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், சில சர்ச்சைகளிலும் சிக்கியது. பின்னர் மோகன் ஜி ‘பகாசூரன்’ என்ற படத்தை இயக்கி வந்தார். இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் முதன்மை கதாப்பாத்திரத்திலும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ‘பகாசூரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் இப்படத்தின் டீசர் வரும் 28-ம் தேதி வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Bakasuran first look 🤩
Hope you all like it ! @mohandreamer @natty_nataraj @SamCSmusic @Gmfilmcorporat1 pic.twitter.com/gkJ3yJjJ4D— selvaraghavan (@selvaraghavan) August 26, 2022
