கோப்ரா டிரைலர்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா. இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிக்குமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கோப்ரா படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
THE MIND-BLOWING #COBRATRAILER IS OUT NOW – https://t.co/yvyP9ibeWT#Cobra In cinemas from August 31🥁🔥@chiyaan @AjayGnanamuthu @arrahman @7screenstudio @Udhaystalin @IrfanPathan @SrinidhiShetty7 @SonyMusicSouth @proyuvraaj pic.twitter.com/9ckvPkHUM3
— Red Giant Movies (@RedGiantMovies_) August 25, 2022

