புதிய அப்டேட்
டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து உருவாக்கியிருக்கும் படம் கோப்ரா. சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏற்கனவே பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
லலித் குமார் தயாரித்துள்ள இப்படம் வரும் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோப்ரா படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்று அளித்துள்ளது.
𝐈𝐓’𝐒 𝐂𝐄𝐑𝐓𝐈𝐅𝐈𝐄𝐃 ✅
Next ➡️ see you in theatres on August 31 #CobraFromAugust31. Let’s begin the countdown.🥁@chiyaan @AjayGnanamuthu @arrahman @Udhaystalin @7screenstudio @SonyMusicSouth pic.twitter.com/n60vlLQQm3
— Red Giant Movies (@RedGiantMovies_) August 20, 2022

