உக்ரைனுக்கு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஆயுத உதவிகள்
உக்ரைனுக்கு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ராணுவ உதவியில் ஹைமார்ஸ் ஏவுகணைகள், பீரங்கி மற்றும் கண்ணிவெடி உபகரணங்கள், டொவ் ஏவுகணைகள் அடங்கும். இது குறித்து பென்டகன் கூறுகையில், ‘கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 2021 முதல் இதுவரை, அமெரிக்கா உக்ரைனுக்கு 19 இராணுவ தொகுப்புகள் அடங்கிய உதவிகளை வழங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

