இலவசங்களையும் நலத்திட்டங்களையும் ஒன்றாக கருத வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம்
தேர்தலை ஒட்டி அறிவிக்கப்படும் இலவசங்களுக்கு எதிராக பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஓன்று தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ‘அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்கும் அரசு நலத்திட்டங்களும் இலவசம் என்று கூற முடியுமா என்று தலைமை நீதிபதி என்.வி. ரமணா கேள்வி எழுப்பினார். மேலும், பல எடுத்துக்காட்டுகளை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம் இலவசங்களையும் நலத்திட்டங்களையும் ஒன்றாக கருத வேண்டாம்’ என தெரிவித்துள்ளார்.

