பட வாய்ப்புக்காக ராஜமவுலியின் காலை பிடித்து அனுபமா காக்கா பிடிக்கிறார் என்று கேலி செய்து ரசிகர்கள் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
அனுபமா பரமேஸ்வரன்
தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். கார்த்திகேயா 2 படம் எதிர்பார்த்த எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காததால் தாமதமாக இப்போது வெளியாகி உள்ளது. படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளதால் அனுபமா பரமேஸ்வரன் நிம்மதி அடைந்துள்ளார். படத்தை ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து அனுபமா பரமேஸ்வரன் பார்த்து ரசித்தார். பின்னர் அதே தியேட்டரில் படம் பார்க்க வந்த பிரபல தெலுங்கு டைரக்டர் ராஜமவுலி அருகில் சென்று அவரது காலை தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெற்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனை பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக ராஜமவுலியிடம் காக்கா பிடிக்கிறார் என்று கேலி செய்து பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர். இதனால் அனுபமா வருத்தத்தில் உள்ளார் என கூறப்படுகிறது.

