1மற்றும் 2ம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
1 மற்றும் 2ம் வகுப்பில் பயிலும் மாணவ – மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது என்று சென்னை நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இன்று உத்தரவிட்டுள்ளது. 1 மற்றும் 2ம் வகுப்பில் பயிலும் மாணவ – மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடரபாக, வீட்டுப்பாடம் தரப்படுவதில்லை என்பதை பறக்கும்படையினர் ஆய்வு செய்து உறுதி செய்யவேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஆய்வுக்கு பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா ? இல்லையா ? என்ற அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

