பிரதமர் மோடி அழைப்பு
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ண தேசியக்கொடியை பறக்கவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், இந்த மாதம் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மக்கள் அனைவரும் தங்களுடைய சமூகவலைதள பக்கத்தின் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்கவேண்டும் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
சூப்பர் ஸ்டார்
இந்நிலையில், தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சமூக வலைதள பக்கத்தின் முகப்பு படமாக தேசிய கொடியை வைத்தார். அதனைத்தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘சுதந்திர தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வரும் 15-ம் தேதி இந்தியர்கள் என்ற உணர்வோடு நாம் அனைவரும் வீட்டின் முன்பு கொடியை பறக்கவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
#ஒவ்வொரு__வீட்டிலும்__தேசியக்கொடி🇮🇳#நாம்__இந்தியனென்று__பெருமைகொள்வோம்💪 pic.twitter.com/VXrQSqNf8h
— Rajinikanth (@rajinikanth) August 13, 2022

