இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 9 மீனவர்களையும் மீட்க கோரி வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளது.
கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 9 மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகினையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெயஷங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில், தமிழகத்தை சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த 6ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில், 10ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இலங்கையில் உள்ள திரிகோணமலை கடற்படை தளத்திலுள்ள காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ளனர் என தெரியவருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகினையும் இலங்கை அரசு விரைவில் விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை இந்திய தூதரகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அந்த் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

