ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுகிறது என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ .பெரியசாமி தெரிவித்தார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி
இது குறித்து அவர் கூறுகையில், ‘ரேஷன் கடைகளில் மக்களுக்கு நல்ல அரிசி வழங்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுகிறது. பகுதி நேர கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டு எம்.எல்.ஏ நிதி மூலம் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றது. ரேஷன் கடைகளில் அனைத்து விதமான பொருட்களும் கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு துறையில் பல புதிய மாற்றங்கள் அடுத்து வரவுள்ளது. ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழநாட்டில் உள்ள பல கிராமங்களில் 150 கார்டுகளுக்கு குறைவாக உள்ள இடங்களில் பகுதிநேர கடை அமைக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த போதை பொருள் விற்பனை புழக்கத்தை ஒரே ஆண்டில் திமுக அரசு ஒளிந்துள்ளது. போதை பொருள் விற்பனை செய்தவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கி அவர்கள் செய்யப்படாதவாறு கண்காணிக்கப்படுகிறார்கள். இதுவரை 1500 வழக்குகள் போடப்பட்டுள்ளது. போதை தடுப்பதற்கு பள்ளி, கல்லூரிகளில் உறுதிமொழி ஏற்க உள்ளோம் என கூறினார்.

