தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது.
தங்க விலை நிலவரம்
கொரோனா ஊரடங்கு, உக்ரைன் – ரஷியா போர், பல நாடுகளின் பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணத்தால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பதால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது. எனினும் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்றம், இறக்கமாக காணப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 38,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து 4,850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு கிராம் வெள்ளியின் விலை 63.00ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 63,000ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

