சென்னையில் இன்று மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
மு.க. ஸ்டாலின்
இந்நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல், தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் அருண் மிஷ்ரா, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் மாநில மனித உரிமை ஆணையத்தில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். திமுக அரசு மனித உரிமைகளை காக்கும் பொறுப்பில் இருந்து ஒருபொழுது தவறுவதில்லை. தமிழக மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் புதுப்பிக்கப்படும். உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என பேசியுள்ளார். இந்நிகழ்ச்சியில், மனித உரிமை மீறல் புகார்களை சிறப்பாக கையாண்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விருது வழங்கினார். முக்கியமாக திருவாரூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆட்சியர்கள், மதுரை காவல் ஆணையர், கோவை எஸ்பிக்கு விருது வழங்கப்பட்டது.

