டெல்லயில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் திரவுபதி முர்முவுடன் தமிழக ஆளுநர் சந்தித்துள்ளார்.
தமிழக ஆளுநர் சந்திப்பு
டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்தார். கடந்த மாதம் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு திரெளபதி முர்முவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தின் நிலுவையில் உள்ள நீட் மசோதா விலக்கு, மாநிலத்தின் மற்ற பிற கோரிக்கை குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

