இந்திய ராணுவத்தில் ஒரு லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காலிப்பணியிடங்கள்
இந்திய ராணுவத்தில் 1 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் ஆட்சேர்ப்பு நடத்தப்படாத காரணத்தால் 1,08,685 ராணுவ வீரர்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ராணூவம், கடற்படை, விமானப்படை என 60,000 காலிப்பணியிடங்கள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

