75வது சுதந்திர தினத்தையொட்டி நடிகர் ரஜினிகாந்த்திற்கு அம்ரித் ரத்னா விருது வழங்கப்பட்டது.
ரஜினிகாந்த்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். 1975ம் ஆண்டு அறிமுகமான இவர் தற்போது வரை கதாநாயகனாக நடித்து வருகிறார். கலைமாமணி, பத்மவிபூஷன் போன்ற பல உயரிய விருதுகளையும் ரஜினிகாந்த் பெற்றுள்ளார். இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனம் சார்பில், இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி நடிகர் ரஜினிகாந்துக்கு அம்ரித் ரத்னா விருது வழங்கப்பட்டது. இதை ரஜினி சார்பாக அவரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விருதைப் பெற்றுக் கொண்டார்.
Thank you channel @news18hindi @news18tamilnadu for honouring appa with the #news18indiaamritratna award on the occasion of the 75th year of Independence.. #thankful #jaihind pic.twitter.com/O0QBfhUUJQ
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) August 2, 2022

