5ஜி ஏலத்தில் எதிர்பார்க்கப்பட்ட 5 லட்சம் கோடி ரூபாய் தொகையை விட குறைவாக 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு தான் ஏலம் சென்றுள்ளது எனவும் மத்திய பதிலளிக்க வேண்டும் என திமுக எம்.பி ஆ.ராசா கோரியுள்ளார்.
திமுக எம்.பி ஆ.ராசா
5ஜி அலைக்ற்று ஏலம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஏலத்தில் முகேஷ் அம்பானி சொந்தமான ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனம் அதிக தொகைக்கு ஏலம் எடுத்து முதலிடத்தை கைப்பற்றியது. மொத்தமாக 5ஜி ஏலத்தில் நிறுவனங்கள் 1,50,173 கோடி ரூபாய்க்கு ஏலம் முடிக்கப்பட்டது. ஜியோ நிறுவனம் மட்டும் 88,078 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. ஏலம் துவங்குவதற்கு முன்னதாக சுமார் 4.3 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு மட்டுமே ஏலம் போயுள்ளது.
இது தொடர்பாக திமுக எம்.பி ஆ.ராசா இந்த 5ஜி ஏலம் தொடர்பாக மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘2ஜி அலைக்கற்று ஏலத்திற்கு பின் 1.76 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் என கூறியுள்ளார். ஆனால் சமீபத்தில் நடந்த 5ஜி அலைக்கற்று ஏலத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. 5ஜி அலைக்கற்றை 5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என்று மத்திய அரசு தான் கூறியது. ஆனால்1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு தான் ஏலம் சென்றுள்ளது. மீதியுள்ள பணம் எங்கே சென்றது என்பது பற்றி மத்திய அரசு தான் நாட்டுமக்களுக்கு பதிலளிக்க வேண்டும். ஏலம் முறையாக நடத்தப்படவில்லை என திமுக எம்.பி ஆ.ராசா கூறியுள்ளார்.

