பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் யூடியூபில் 20 கோடி பார்வையாளர்களை கடந்து உள்ளது.
பீஸ்ட் படம்
விஜய் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம் பீஸ்ட். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். சன் பிக்சர்ஸ் இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் படத்தில் இடம் பெற்ற ஜாலியோ ஜிம்கானா, அரபிக்குத்து ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக முதலில் வெளியான அரபிக்குத்து பாடல் ரசிகர்களை முணுமுணுக்க வைத்தது. மேலும், யூடியூப்பில் சாதனையும் படைத்தது.
இந்நிலையில், அனிருத் இசையமைத்துள்ள அரபிக்குத்து பாடல் யூடியூபில் 20 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
#Arabickuthu Hits the massive 200 Million views
▶️ https://t.co/kyhBWXmiQD@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @jonitamusic @selvaraghavan @manojdft @AlwaysJani @Nirmalcuts @KiranDrk pic.twitter.com/MvpqY3bJRm
— Sun Pictures (@sunpictures) August 1, 2022

