வெந்து தணிந்தது காடு படத்தில் தனது டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார் நடிகர் சிம்பு.
டப்பிங் பணி
இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் சிம்பு மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றும் படம் வெந்து தணிந்தது காடு. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கவுதம் மேனன், சிம்பு கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தில் நடிகர் சிம்பு தனது டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார். இதன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

