சமூகம்சினிமா

பிரபல தமிழ் பட இயக்குனருக்கு 6 மாதம் சிறை – நீதிமன்றம் அதிரடி !

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல இயக்குனர்

2001-ம் ஆண்டு வெளியான ‘ஆனந்தம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. அதனைத்தொடர்ந்து ரன், ஜி, சண்டக்கோழி ஆகிய படங்களின் மூலம் பிரபலமானாc. இறுதியாக இவர் இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி 2 மற்றும் தி வாரியர் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

சிறை தண்டனை

இந்நிலையில், இயக்குனர் லிங்குசாமி ‘எண்ணி ஏழு நாள்’ என்ற படத்திற்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை என்று கூறி பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. விசாரணை நடைபெற்று வந்த இந்த வழக்கில், இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கி இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related posts