போட்டியாளர்களாக கருதப்படும் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாவீரன் படம்
தற்போது சிவகார்த்திகேயன் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இவரின் மண்டேலா திரைப்படத்திற்கு சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கபட்டுள்ளதால் மாவீரன் படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பரத் சங்கர் இசையமைக்கும் இந்த படத்தை அருண் விஸ்வா தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய்சேதுபதியை படக்குழுவினர் அணுகியதாக கூறப்படுகிறது.

