விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பிரதோஷ விழா
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆடி மாத பிரதோஷ விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பிரதோஷ நந்தி வாகனத்தில் சந்திரசேகர சுவாமியும், அம்பாளும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதனைத்தொடர்ந்து நந்தி பெருமானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பலவகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இதன் பின்னர் அருகம்புல், எருக்கம் பூ, மஞ்சள், வில்வ இலை உள்ளிட்ட மாலைகளிட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளான கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

