கல்வி நிறுவனங்களை நடத்துவோர் அதை வியாபாரமாக கருதாமல், தொண்டாக செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வர் பேச்சு
சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கலைக் கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர்,’கொரோனா தொற்றால் என் தொண்டை பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாட்டிற்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.
சமீப காலமாக நடந்த சில நிகழ்வுகள் எனக்கு மன வேதனையை அளிக்கிறது. கல்வி நிறுவனங்களை நடத்துவோர் அதை வியாபாரமாக பார்க்க கூடாது. மேலும், மாணவர்கள் பட்டம் பெற்றால் மட்டும் போதாது தன்னம்பிக்கையும் வேண்டும்’ என்று முதல்வர் கூறினார்.

