இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை மற்றும் வெள்ளியின் விலை குறித்து காண்போம்.
தங்கம் விலை
கடந்த இரண்டு நாள்களில் தங்கம் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி சென்னையில் இன்றைய 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,728-க்கும் சவரனுக்கு ரூ.37,824-க்கும் விற்பனையாகிறது.
நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.8 ஆகவும் சவரனுக்கு ரூ.64 ஆகவும் விலை உயர்ந்து காணப்படுகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,130 ஆகவும் சவரனுக்கு ரூ.41,040-க்கும் விற்பனையாகிறது.
குறைந்த வெள்ளி விலை
நேற்றைய விலைப்படி வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.61.10-க்கும் கிலோவுக்கு ரூ.61,100- கும் விற்பனையானது. இன்று வெள்ளியின் விலை குறைந்து விற்பனையாகிறது. அதன்படி கிராமுக்கு ரூ.60.80-க்கும் கிலோ விலை ரூ.60,800-க்கு விற்பனையாகிறது.

