ஹன்சிகா மோத்வானி
தமிழில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் ஹன்சிகா. இவரின் 50வது படமான மஹா இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் யு.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, ரேஷ்மா, சனம் ஷெட்டி, நந்திதா ஜெனிபர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ஹன்சிகா தனது 50-வது படம் வெளியானதையொட்டி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
Love and gratitude ❤️🙏🏻 #Maha pic.twitter.com/O7flEnXDRq
— Hansika (@ihansika) July 22, 2022

