கள்ளக்குறிச்சியில் இறந்த 12ம் வகுப்பு மாணவிக்கு நீதி கேட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.
பிரபல நடிகை
தமிழில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் பிரியா பவானி சங்கர். இவர் 2017ம் ஆண்டு வெளியான மேயாத மான் படத்தின் மூலம் தமிழ்திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா படங்களின் மூலம் முன்னணி கதாநாயகியாக மாறியுள்ளார். அவர் தற்போது அகிலன், பொம்மை, ருத்ரன், பத்து தலை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 13ம் தேதி கள்ளக்குறிச்சியில் மர்மமான முறையில் உயிரிழந்த 12ஆம் வகுப்பு மாணவிக்கு நீதி கேட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.
#justiceforsrimathi pic.twitter.com/QBuilRicDW
— Priya BhavaniShankar (@priya_Bshankar) July 18, 2022

