பகத் பாசில் நடிப்பில் வெளியாகியுள்ள ‘நிலை மறந்தவன்’ திரைப்படத்திற்கு எதிராக வந்த எதிர்ப்புக்கு பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
பகத் பாசில், நஸ்ரியா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் ட்ரான்ஸ். அன்வர் ரஷீத் இந்த திரைப்படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். முக்கிய கதாப்பாத்திரத்தில் இயக்குனர் கவுதம் மேனன் நடித்திருந்தார். போலி மத போதகர்களை மையமாக வைத்து உருவாகியிருந்த
இத்திரைப்படம் கேரளாவில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் ட்ரான்ஸ் திரைப்படம் தமிழில் ‘நிலை மறந்தவன்’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த படத்திற்கு கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது. சில திரையரங்குகளில் காட்சிகள் நிறுத்தப்பட்டது. இதற்கு பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா தனது கண்டனம் தெரிவித்துள்ளார்.

