புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரண்டடுக்கு ஜிஎஸ்டி வரி முறையால் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் விலை குறைந்து, வாடிக்கையாளர்களின் செலவுகளும் குறைந்து, மக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்து, பாரதப் பொருளாதாரத்தில் 2 லட்சம் கோடி ரூபாய் கையிருப்பு அதிகரிக்கும் என நமது மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீத்தாராமன் அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
ஜிஎஸ்டி வரியை சீர்திருத்தி 140 கோடி இந்தியர்களின் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரித்து மாபெரும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டுள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மீண்டுமொரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என தனது எக்ஸ் பக்கத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

