உலக நாடுகளை மிரட்டி வந்த குரங்கு அம்மை தற்போது கேரளாவில் உள்ள விமான பயணிக்கு பரவியுள்ளது.
குரங்கு அம்மை நோய்
உலகம் அளவில் இதுவரை 3, 413 நபர்களுக்கு குரங்கு அம்மை தாக்கி உள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில், கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கேரளா மக்களுக்கு நோய் குறித்து விழிப்புணர்வும், மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற உயர் நிலை ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் , 5 மாவட்டங்களில் சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அறிவித்தார். திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம் திட்டா, ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டுள்ள நபருடன் ஒரே விமானத்தில் வந்துள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

