ஜூலை 15ம் தேதி முதல் கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் 2 தவணை தடுப்பூசியுடன் சேர்த்து தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. தமிழக அரசு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. இதன்காரணமாக கொரோனா பரவளினால் அதிக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
பூஸ்டர் டோஸ்
இந்நிலையில், 75 நாள் சிறப்பு இயக்கத்தின் கீழ் அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாக கொரோனா பூஸ்டர் டோஸ்கள் போடப்படுகிறது. இதில் ஜூலை 15ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

