நாளை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டு சந்தையில் 7 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
எட்டயபுர ஆட்டு சந்தை
கோவில்பட்டி, எட்டையாபுரம் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச் சந்தைகளில் ஒன்றாக உள்ளது. இதில் வெள்ளாடு, செம்மறியாடு உள்ளிட்ட ஆடுகளை இங்கு வந்து வியாபாரிகள் வாங்கிச் செல்வது வழக்கம். வாரம் தோறும் சனிக்கிழமை இந்த ஆட்டு சந்தை நடைபெறும். இந்நிலையில், நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நேற்று இரவு எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் விற்பனை அமோகமாக நடைபெற்றது. சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில், 8,000 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். நேற்று இரவு தொடங்கி விடிய விடிய தொடர்ந்த விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சுமார் 7 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும், முககவசம் அணிந்து இருந்தால் மட்டுமே சந்தைக்குள் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

