நாகூர் தர்க்கா சார்பாக கடற்கரையில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நாகூர் கடற்கரையில் பக்ரீத் தொழுகை
நாகப்பட்டினம், சவுதி அரேபியாவில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாகூர் கடற்கரையில் ஜாக் ஜமாத் சார்பாக சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்நிலையில், நாகூரில் தர்க்கா சார்பாக நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக தொழுகையில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

