பிரபல நடிகர் விக்ரம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் விக்ரம்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரமுக்கு மாரடைப்புக் கரணமாக உடல் நலக்குறைவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விக்ரமுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இன்று மாலை விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாக உள்ளது. மேலும், நாளை மறுநாள் விக்ரமின் மற்றொரு படமான கோப்ரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

