தமிழகத்தின் கொரோனா தொற்றின் பாதிப்பு 2,765 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இதனால் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்பெயரில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அறிவிப்பு
இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,707 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 2,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன்பெயரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 34,93,599 பேராக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் சுமார் 1,011 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

