நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என அனைத்து உயர்மட்ட அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதம்
நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை அதிகாரிகள் உடனடியாக அமல்படுத்துவது இல்லை என்றும், இதன் காரணமாக மனுதாரர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே நீதிபதிகளின் உத்தரவுகளை உடனடியாக செயல்படுத்துவதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்கலாம் என்றும், ஒருவேளை அந்த உத்தரவுகளை செயல்படுத்த முடியாவிட்டால் அது குறித்து மேல்முறையீடு செய்யலாம். ஆனால் அதையும் அதிகாரிகள் செய்வதில்லை. அனைத்து துறை அதிகாரிகளும் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் கண்டிப்பாக நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும் என தமிழக தலைமை செயலாளர் இறையன்பு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

