தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,672 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு
தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகின்றது. தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத்துறையின் கீழ் நாள் ஒன்றுக்கு சுமார் 30,000 நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு
மட்டும்மல்லாது இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,50,000-ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது நேற்றுமுன் தினம் 17,092 ஆக இருந்த நிலையில், நேற்று சற்று குறைந்து 16,103 ஆக பதிவாகியுள்ளது.

தமிழக அரசு அறிக்கை
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக 2,672 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,82,775 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்து சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 14,504 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,487 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதில் சென்னையில் 1,072 பேருக்கும், செங்கல்பட்டில் 373 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

