Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»பல கோடி ரூபாய் சொத்து ஆவணத்துக்காக கொடைக்கானலில் தொழிலதிபர் கொலை – 9 பேர் கைது

பல கோடி ரூபாய் சொத்து ஆவணத்துக்காக கொடைக்கானலில் தொழிலதிபர் கொலை – 9 பேர் கைது

March 1, 20262 Mins Read8 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பல கோடி ரூபாய் சொத்து ஆவணத்துக்காக கொடைக் கானலில் தொழிலதிபரும், நடிகையின் தந்தையுமான சூர்யநாராயணன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ஒருவரை தேடி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சூர்யநாராயணன் (73). நடிகை விஷ்ணுபிரியாவின் தந்தையும், தொழிலதிபருமான இவருக்கு சொந்தமான தங்கும் விடுதி, கொடைக்கானலில் உள்ளது.

பிப்.21-ம் தேதி விடுதியில் தங்கியிருந்த இளைஞர்கள் சிலர், பணியாளர்களை ஒரு அறையிலும், சூர்யநாரா யணனை ஒரு அறையிலும் கயிற்றால் கட்டிப் போட்டனர்.

மேலும், சூர்யநாராயணனின் வாய், மூக்கை டேப்பால் சுற்றி மூச்சுவிட முடியாதபடி செய்து கொலை செய்தனர். பின்னர், அந்த விடுதியில் இருந்த முக்கிய ஆவணங்கள், நகை, பணம் மற்றும் சிசிடிவி ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இந்நிலையில் கயிற்றால் கட்டப்பட்டிருந்த ஒரு பணியாளர் அதிலிருந்து விடுவித்து கொண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த கொடைக்கானல் போலீஸார் சூர்யநாராயணனின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க :  சென்னை போர்ட் நிறுவனத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் !

அவரது மகளும், நடிகை யுமான விஷ்ணுபிரியா அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை சிறப்பு தனிப்படை அமைத்து தேடினர்.

இதில் சோளிங்கர் பகுதியை சேர்ந்த ஷியாம் (31), அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த கோகுல்நாத் (26), ரஞ்சித்(32), திருவள்ளூவரை சேர்ந்த கிருஷ்ண பிரசாத் (25), அட்சய நடராஜ் (26), கார்த்தி (26), சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த கிரண் (36), அவரது தாயார் கிரிஜா (53), விடுதி பணியாளர் ஆறுமுகம் (54) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து தங்க நகைகள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், 2 கார்களை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மகேந்திரன் என்பவரை தேடி வருகின்றனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், சூர் யநாராயணனின் உதவியாளராக இருந்த கிரிஜாவின் வீட்டில் அவர் சில காலம் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதையும் படிக்க :  செல்போன் திருடியதாக தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது !

உதவியாளராக மட்டுமின்றி பணத்தை இரட்டிப்பு செய்து தருவது போன்ற மோசடிகளிலும் கிரிஜா ஈடுபட்டு வந்துள்ளார். கிரிஜாவின் மகன் கிரணின் நண்பரான ஷியாமும் இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதற்கிடையே, சூர்ய நாராயணனின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணம் கொடைக்கானலில் இருப்பதாகவும், அதனை திருடி வந்தால் பணம் தருவதாகவும் கிரிஜாவும், கிரணும் ஷியாமிடம் கூறியுள்ளனர்.

ஷியாமும் தனது நண்பர்களுடன் கொடைக்கானலில் உள்ள சூர்ய நாராயணனின் விடுதியில் தங்கியிருந்து சொத்தின் ஆவணம், பணத்தை திருடு வதற்காக அவரை கட்டிப் போட்டுள்ளனர். சத்தம் போட்டு விடுவார் என்பதற்காக சூர்யநாராயணனின் வாயில் டேப்பை ஒட்டினர்.

இதில் மூச்சுத்திணறி இறந்து விட்டார். கிரிஜாவுக்கும், விடுதி பணியாளர் ஆறுமுகத்துக்கும் ஏற்கெனவே பழக்கம் இருந் துள்ளது. சம்பவத்தன்று, அந்த இளைஞர்கள் தன்னையும் கட்டி போட்டதாக ஆறுமுகம் நாடகமாடியது தெரிய வந்தது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகாகித ஆலையில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
Next Article பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆன எஸ்எஸ்ஐ தருமபுரியில் சடலமாக மீட்பு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.