சமூகம்தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளை முதல் கலைநிகழ்ச்சிகள் !

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழா

75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இணைந்து தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையம், மெட்ரோ ரயில் நிலையங்களில் பல்வேறு கிராமியக் கலை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. நாளை தொடங்கும் இந்த கலை நிகழ்ச்சிகளை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதிர்வேதி தொடங்கி வைக்கிறார்.

கலைநிகழ்ச்சிகள்

இதன் பெயரில் நாளை புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் மெட்ரோ ரயில் நிலையத்திலும், சனிக்கிழமை அன்று விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்திலும், ஞாயிற்றுக்கிழமை கிண்டி மெட்ரோ நிலையத்திலும், 15-ந்தேதி திங்கட்கிழமை சுதந்திர தினத்தன்று அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்திலும் இரவு 8 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts