கச்சநத்தம் படுகொலை வழக்கில் 27 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனையும் வழங்கப்படவுள்ளது.
கச்சநத்தம் படுகொலை
சிவகங்கை, திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018ம் ஆண்டு கிராமத்திற்குள் புகுந்த பலர் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் உள்ளிட்ட மூவரை படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சுமன், அருண்குமார், சந்திரக்குமார், அக்னிராஜ், ராஜேஸ் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். வழக்கானது சிவகங்கை நீதிமன்ற வளாகத்தில் உள்ள பட்டியலின வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று நீதிபதி முத்துக்குமரன் 27 நபர்கள் குற்றாவாளிகள் என அறிவித்தார். மேலும், தண்டனை விவரங்கள் வருகிற 3ம் தேதி வழங்கப்படும் என ஒத்திவைக்கப்பட்டது.