அரசியல்இந்தியாதமிழ்நாடு

“மோடியை ஒரு நாள் தமிழகம் கொண்டாடும்” – தி.மு.க எம்.பி பாரிவேந்தர் புகழாரம்!

மோடியை ஒரு நாள் தமிழகம் கொண்டாடும்! – தி.மு.க எம்.பி பாரிவேந்தர்.

சென்னை: திமுக எம்.பி பாரிவேந்தர் மோடியை புகழ்ந்துள்ளார். அதுமட்டுமின்றி மோடியை ஒரு நாள் தமிழகம் கொண்டாடும் என்றும், அந்த நாள் மிக விரைவில் வரப்போகிறது என்றும் பேசியுள்ளார். இன்று அரசியல் வட்டாரமே இதை பற்றி தான் பேசுகிறது.

பாரிவேந்தர் – ஐ.ஜே.கே

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றவர் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர். இவர் தன் உடையார் சமூக மக்கள்களின் மேம்பாட்டுக்காகவும், அவர்களை ஒருங்கிணைக்கவும் பெரிய முயற்சிகளை முன் எடுத்தார்.

ஆனால் அந்த முயற்சிகள் அவர் நினைத்த அளவிற்கு கை கொடுக்கவில்லை. அது மட்டுமல்லாமல் இவரது கட்சி ஐ.ஜே.கே, தி.மு.க, பா.ஜ.க என மாறிமாறி கூட்டணி வைத்து தேர்தல்களை சந்தித்தது.

தி.மு.க எம்.பி

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். ஆனால் எம்.பி ஆன பிறகு உடல் நிலைக் குறைவு ஏற்பட்டதால், இவரால் அவரின் தொகுத்தில் சரிவர செயல்பட்ட இயலவில்லை என்று கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திரு பாரிவேந்தர், ‘அரசியலுக்கு ஏன் வந்தேன் என்று நினைத்து வேதனை அடைவதாகவும். யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழலோ, கொள்ளையோ குறைவதில்லை.

மேலும், இனி வரும் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி எந்தக்கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளாது’ என்றும் கூறியுள்ளார்.
அதேநேரத்தில், ‘திமுகவுடன் தனக்கு நட்பும் இல்லை விரோதமும் இல்லை. இவர்களுடன் கூட்டணி வைத்தால் அவர்கள் கடிந்துகொள்ளவார்கள். அவர்களுடன் கூட்டணி வைத்தால் இவர்கள் கடிந்துகொள்ளவர்கள்’ என வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.
இவரின் இந்த பேச்சை கண்ட பலர், இவர் யாரை சொல்லுகிறார்? யார் இவருக்கு அழுத்தம் கொடுத்தது? என்று யோசித்து குழம்பியுள்ளனர்.

மோடிக்கு புகழாரம்

இந்நிலையில், திருச்சி புதூரில் பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் புதிய தலைமை அலுவலக திறப்பு விழாவிற்கு தி.மு.க. எம்.பி. திரு பாரிவேந்தர் வருகை தந்து இருந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய திரு பாரிவேந்தர், “மகாத்மா போன்றவர் நமது பிரதமர் மோடி. இந்தியாவின் வளர்ச்சிக்காக மிகவும் கடினமாக உழைக்கிறார். மோடியை தமிழகத்தில் தவறாக சித்தரித்து, ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்கி வருகின்றனர்.

மோடியை தமிழக மக்கள் புரிந்து கொள்ளும் காலம் மிக விரைவில் வரும். தமிழக மக்கள் மோடியை தலைவராக ஏற்றுக்கொண்டு அவரை கொண்டாடப் போகிறார்கள்.

இந்தியாவின் வரலாற்றையும், பெருமையையும் பாதுக்காக்க, நாட்டுப்பற்றை பேணிக்காக்கவும் அயராது உழைத்து கொண்டு இருக்கும் பெருமகன் மோடி. கட்டாயம் தமிழக மக்கள் இதை புரிந்துகொண்டு ஒரு நாள் மோடியை புகழ்வார்கள்’ என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் “நீட் தேர்வை ஏற்பது கடினமாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். தேசிய கல்வி கொள்கை சரியானது, மாநில கொள்கை தேவையற்றது” என்று கூறியுள்ளார்.

குழப்பம்

பாரிவேந்தரின் பேச்சால், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஐ.ஜே.கே, பா.ஜ.க.-வுடன் கூட்டணிக்கு தயாராகிவிட்டதா என்ற சந்தேங்கள் அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ளது. ஆனால் பா.ஜ.க.வில் இருந்து பிரிந்து வரும்போது பா.ஜ.க.வை மிக காட்டமாக விமர்சித்து தங்கள் கூட்டணியை முறித்துக்கொண்டு வந்தது பாரிவேந்தர் தான்.

அதனால் பா.ஜ க வும் ஐ.ஜே.கே வும் மீண்டும் கூட்டணி வைத்துக்கொள்வார்களா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

Related posts