Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, August 31
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»மே.இ.தீவுகளை தோற்கடித்தது தென் ஆப்பிரிக்கா! அரை இறுதிக்கு முன்னேற்றம்!

மே.இ.தீவுகளை தோற்கடித்தது தென் ஆப்பிரிக்கா! அரை இறுதிக்கு முன்னேற்றம்!

February 27, 20263 Mins Read16 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 8 சுற்​றில் குரூப் 1-ல் இடம் பெற்​றுள்ள தென் ஆப்​பிரிக்கா – மேற்கு இந்​தி​யத் தீவு​கள் நேற்று அகமதா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் மோதின. இரு அணி​களுக்கும் இது 2-வது ஆட்​ட​மாக அமைந்​திருந்​தது.

முதலில் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி அதிரடி​யாக விளை​யாடியது. கேசவ் மகா​ராஜ் வீசிய முதல் ஓவரில் கேப்​டன் ஷாய் ஹோப் 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்டரியை விளாசி​னார். இந்த ஓவரில் மட்​டும் 17 ரன்கள் குவிக்​கப்​பட்​டன. மார்கோ யான்​சன் வீசிய அடுத்த ஓவரில் பிரண்​டன் கிங் 3 பவுண்​டரி​களை அடித்​தார். இதனால் 2 ஓவர்​களில் 29 ரன்​களை குவித்து மேற்கு இந்தியத் தீவு​கள் அணி மிரளச் செய்​தது.

ஆனால் இதன் பின்​னர் காகிசோ ரபா​டா, லுங்கி நிகிடி, கார்​பின் போஷ் ஆகியோர் தங்​கள் சீர​ரான வேகத்​தால் மேற்கு இந்​தி​யத் தீவு​களை அணியை கட்​டுப்​படுத்​தினர். ஷாய் ஹோப் 16 ரன்​களில் ரபாடா பந்​தில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்​கிய ஷிம்​ரன் ஹெட்​மயர் 2 ரன்​களில் ரபாடா பந்​தில் நடையை கட்​டி​னார். பிரண்​டன் கிங் 11 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் 21 ரன்​களில் லுங்கி நிகிடி பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

ராஸ்​டன் சேஸ் 2, ஷெர்​பேன் ரூதர்​போர்டு 12, ரோவ்​மன் பவல் 9, மேத்யூ போர்டு 11 ரன்​களில் நடையை கட்​டினர். 10.2 ஓவர்​களில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 83 ரன்களுக்கு 7 விக்​கெட்​களை இழந்து தவித்​தது. ஆனால் அதன் பின்​னர் ஜேசன் ஹோல்​டர், ரோமாரியோ ஷெப்பர்டு ஜோடி தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொண்டு தென் ஆப்​பிரிக்க பந்​து​வீச்​சாளர்​களுக்கு நெருக்​கடி கொடுத்​தது.

இதையும் படிக்க :  உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்தியா: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து மழை

ரோமாரியோ ஷெப்​பர்டு 37 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 52 ரன்​களும் ஜேசன் ஹோல்​டர் 31 பந்துகளில், 3 சிகஸ்ர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 49 ரன்​களும் விளாச மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 20 ஓவர்​களில் 8 விக்கெட்​கள் இழப்​புக்கு 176 ரன்​கள் குவித்​தது. 8-வது விக்​கெட்​டுக்கு ஜேசன் ஹோல்​டர், ரோமாரியோ ஷெப்​பர்டு ஜோடி 57 பந்​துகளில், 89 ரன்​கள் விளாசி​யது.

தென் ஆப்​பிரிக்க அணி தரப்​பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்களை வீழ்த்​தி​னார். காகிசோ ரபா​டா, கார்​பின் போஷ் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். இதையடுத்து 177 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி எய்​டன் மார்க்​ரம், குயிண்​டன் டி காக் ஆகியோரது அதிரடி​யால் 16.1 ஓவர்​களில், ஒரு விக்​கெட்டை மட்​டும் இழந்து 177 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்றது.

தனது 14-வது அரை சதத்தை கடந்த கேப்​டன் எய்​டன் மார்க்​ரம் 46 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 82 ரன்​களும் ரியான் ரிக்​கெல்​டன் 28 பந்​துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்​டரி​களு​டன் 45 ரன்​களும் விளாசினர். இந்த ஜோடி 2-வது விக்​கெட்​டுக்கு 50 பந்​துகளில் 82 ரன்களை குவித்​தது.

இதையும் படிக்க :  சிஎஸ்கே அணியில் நடந்த அதிரடி மாற்றம்: முன்னாள் இங்கிலாந்து வீரருக்கு முக்கிய பொறுப்பு

முன்​ன​தாக குயிண்​டன் டி காக் 24 பந்​துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்​டரி​களு​டன் 47 ரன்​கள் விளாசிய நிலை​யில் ராஸ்​டன் சேஸ் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். முதல் விக்​கெட்​டுக்கு எய்​டன் மார்க்​ரம், குயிண்​டன் டி காக் ஜோடி 48 பந்​துகளில் 95 ரன்​களை வேட்​டை​யாடியது.

9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு சூப்​பர் 8 சுற்​றில் இது 2-வது வெற்றியாக அமைந்​தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்​பிய​னான இந்​தி​யாவை வீழ்த்தியிருந்​தது. மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு இது முதல் தோல்​வி​யாக அமைந்தது.

அந்த அணி தனது முதல் ஆட்​டத்​தில் ஜிம்​பாப்​வேவை வீழ்த்​தி​யிருந்​தது. 2 புள்​ளி​களு​டன் உள்ள மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி தனது கடைசி ஆட்​டத்​தில் வரும் 1-ம் தேதி நடப்பு சாம்​பிய​னான இந்​தி​யா​வுடன் மோதுகிறது. இந்த ஆட்​டத்​தில் வெற்றி பெறும் அணி அரை இறுதி வாய்ப்பை பெறும்​.

இந்நிலையில் நேற்று குரூப் 1-ல் 2-வது நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி, ஜிம்பாப்வேவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் முடிவால் தென் ஆப்பிரிக்க அணி குரூப் 1-ல் 4 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறியது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஜிம்​பாப்வே அணியை வீழ்த்தியது இந்தியா – அரை இறு​தி வாய்ப்பு தக்க​வைப்பு
Next Article இன்றைய ராசிபலன் @ 27 பிப்ரவரி 2026

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,930 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,156 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,125 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,930 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,156 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,125 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.