எவ்வளவு முக்கி முனகினாலும் வர வர இந்த தொலைகாட்சி தொடர்கள் வாழ்வின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டன. தொடர்களில் வீட்டில் தூங்கி எழும் ஒரு குடும்ப தலைவி காலையில் சோம்பல் முறிக்கும் போது கூட உதட்டுச் சாயம் சிறிதும் களைவதில்லை! வீட்டில் துன்புறுத்தப்படும் மருமகள் கதாபாத்திரத்தின் கழுத்தில் மேட்சிங் நகைகள் குறைவதில்லை! எல்லா தொடர்களிலும் வில்லி கதாபாததிரத்திற்கு இளமையான பெண்களையே தெரிவு செய்கின்றனர். இருந்தும் நம் வீட்டில் பாட்டியில் தொடங்கி சிறுசுகள் வரை ஆண் பெண் வித்தியாசம் இன்றி தொலைக்காட்சி தொடர்களுக்கு அடிமையாகி உள்ளோம். தொடர்களை காண வலைதளங்கள் செயலிகள் என வரிசை கட்டி நமக்கு உதவி செய்கின்றன. அந்த தொடர்களில் வரும் கதாபாத்திரங்கள் சிறிதும் நிஜ வாழ்க்கையோடு ஓத்து போவதில்லை.
இருப்பினும் நம் கண்கள் ஓய்வதில்லை.
இந்த வார தொடர்களின் சுருக்கம் இதோ!!
ஆனந்தம் குடும்பத்தில் அதாங்க நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ்ல குழந்தை பிறப்பது தாமதமாவது பெருங்குற்றமாக காட்டுகிறார்கள். குழந்தை பெற்றுக்கொள்வது மட்டுமே பெண்மையின் அடையாளம் என காட்சிகளை சென்டிமெண்ட் காட்சியாக்க முயற்சிக்கிறார்கள்.
பாரதி கண்ணம்மால டி.என்.ஏ. டெஸ்ட் எடுக்க நம்ம கை காச போட்டாச்சும் அனுப்பி வைக்கலாம் போல. இதுல பாரதி டாக்டர் அப்பா என கூறி மருத்துவ உலகத்தை அசிங்கபடுத்துகிறார்கள்.
புதுசா நம்ம வீட்டு பொண்ணு பக்கத்து வீட்டு பாட்டினு எடுத்து தல்லுராங்கபா. முடியல.! இதுல தென்றல் வந்து என்னை தொடும் வேற. பெண்களுக்கு எதிரான வன்முறைல கட்டாய திருமணமும் ஒன்னு. அத அந்த பொண்ணும் ஏத்துக்குற மாறி எடுத்து பெரியார் அண்ணா வந்து நம்மள எவ்வளவு மாத்திட்டு போனாலும் இந்த தொடர்களோட இயக்குனர்கள் இல்ல தாலி கட்டிட்டா கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு பின்னோக்கி இழுத்துட்டு போறாங்க.!
ஒரு தொலைக்காட்சி சேனல்லையே இவ்வளவு தொல்லை. இன்னும் நிறைய இருக்கு பொறுமையா எல்லாத்தையும் அலசுவோம்.!!