இந்தியாசமூகம்

எனது வீட்டை தரைமட்டம் ஆக்குங்கள்: நூதன கோரிக்கை

எனது வீடு சட்டவிரோதமானது, புல்டோசர் வைத்து இடித்து தள்ளுங்கள்’: யோகி அரசுக்கு உத்தரபிரதேச நபர் கோரிக்கை!

உ.பி.யின் ராம்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட தனது வீட்டை “யோகியின் புல்டோசர் திட்டம்” இடித்துவிடும் என்ற அச்சத்தில், 40 வயதுடைய நபர் தானே ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்து, SDM அசோக் சவுத்ரியிடம் “முறையீடு” செய்தார். அரசுக்கு சொந்தமான வறண்ட குளம் மற்றும் மயானத்தின் மீது ஒரு பகுதி வீடு கட்டப்பட்டுள்ளது.

“ஆரம்ப விசாரணையின்” போது, ​​எஹ்சான் மியானின் கூற்று “உண்மையானது” என்று கண்டறியப்பட்டது. எஹ்சான் கூறும்போது, ​​“இந்த வீட்டில் நாங்கள் இரண்டு தலைமுறைகளாகத் தங்கியிருக்கிறோம். எங்கள் நில வரைபடத்தில், வக்ஃப் மற்றும் அரசாங்கத்தின் சொத்தில் சட்டவிரோதமாக வீடு கட்டப்பட்டிருப்பதை சமீபத்தில் கண்டுபிடித்தேன். எனவே, அதை இடிக்க மனு தாக்கல் செய்ய முடிவு செய்தேன்.

SDM சௌத்ரி கூறுகையில், “ராம்பூர் மாவட்டத்தின் ஷஹாபாத் தாலுகாவிற்கு உட்பட்ட மித்ராபூர் எரோலா கிராமத்தில் பல வீடுகள் வறண்ட குளங்கள் மற்றும் கல்லறைகள் மீது கட்டப்பட்டுள்ளன.” என்றார்.

Related posts