அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் தினகரன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், ஜான்பாண்டியன், பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரத்தை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள்:
- மயிலாப்பூர்
- தளி
- மொடக்குறிச்சி
- உதகமண்டலம்
- அவினாசி (தனி)
- திருப்பூர் தெற்கு
- கோவை வடக்கு
- கந்தர்வக்கோட்டை (தனி)
- புதுக்கோட்டை
- திருப்பத்தூர்
- மதுரை தெற்கு
- சாத்தூர்
- திருச்செந்தூர்
- வாசுதேவநல்லூர் (தனி)
- ராதாபுரம்
- நாகர்கோவில்
- விளவங்கோடு
- ஆவடி
- திருவண்ணாமலை
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- அறந்தாங்கி
- மானாமதுரை (தனி)
- ராமநாதபுரம்
- குளச்சல்
- பத்மநாபபுரம்
- ராசிபுரம் (தனி)

