Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»வார பலன்கள் @ பிப்.5 – 11

வார பலன்கள் @ பிப்.5 – 11

February 5, 20265 Mins Read17 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேஷம்:
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) – பஞ்சம ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் – லாப ஸ்தானத்தில் புதன், சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்ல செய்தி வரும். உங்கள் பணம் உங்களிடம் வந்து சேரும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. எந்த சந்தர்ப்பத்திலும் கோபமாகாமல் தேவையற்ற பேச்சுகளைக் குறைப்பது உங்களுக்கு நன்மையைக் கொடுக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். குல தெய்வ வழிபாடு நற்பலன்களைத் தரலாம்.

மன தைரியம் உண்டாகும். வாழ்க்கைத் துணையால் லாபங்கள் ஏற்படும். தந்தையின் உடன் பிறந்தோரால் நல்ல செய்தி வந்து சேரும். புத்திரர்களால் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். வேலையில் இடமாற்றம் உண்டாகும். மந்த நிலை விலகும். தொழில் தொடங்குவதற்கான சந்தர்ப்பங்கள் வந்து சேரும். தீடீர் பிரயாணம் ஏற்படும், அதன் மூலம் செலவுகள் ஏற்படலாம்.

சிலர் புதிய வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். அரசாங்கத்திடம் இருந்து சிறு தொந்தரவுகள், பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டிய நேரம் இது. மாணவர்கள் கவனமாக படிப்பதால் பின் தங்கி இருக்கும் பாடங்களில் முன்னேற்றம் காண வாய்ப்புண்டு.

அஸ்வினி: இந்த வாரம் பண வரத்து கூடும். செயல் திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள்.

பரணி: இந்த வாரம் வீடு கட்டுவதற்கு தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான சரக்குகளை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் பணத் தேவை அதிகரிக்கும். கையிருப்பு கரைவதோடு கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு கூடும். வாகன பயணத்தில் மிதவேகத்தைப் பின்பற்றுவது அவசியம். புத்திரர் உங்களின் சிரமத்தை அறிந்து உதவி செய்ய முன்வருவர்.

பரிகாரம்: சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற நன்மை நடக்கும்.

ரிஷபம்:
(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு ஸ்தானத்தில் குரு(வ) – சுக ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் – தொழில் ஸ்தானத்தில் புதன், சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.

இதையும் படிக்க :  தஞ்சை பெரிய கோவில் கோபுர நிழல் கீழே விழாது பள்ளிக்கல்வித்துறை விளம்பரத்தில் தவறு

பலன்கள்: இந்த வாரம் சமயோஜித புத்தியுடன் செயல் பட நன்மைகள் கிடைத்தேறும். எந்த சூழ்நிலையிலும் மன உறுதியுடன் செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக வராமல் இருந்த நல்ல செய்தி வந்து செரும். குடும்பத்தில் அமைதி நிலவும். அரசாங்க வழியில் சகாயம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் லாபம் கிடைக்கும். புத்திரர்களால் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும்.

வாழ்க்கைத் துணையிடம் கருத்து வேறுபாடுகள் வந்தாலும் பின்பு உங்கள் மனதைப் புரிந்து கொண்டு சமாதானம் ஆகி விடுவார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளைத் மிகுந்த கவனமாக செய்ய வேண்டும். மேல் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். சவால் மிகுந்த வேலைகளை முடித்து மேல் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். தொழில் துறையினருக்கு மந்தமான நிலைமை இருந்தாலும் தனித்திறமையால் எதையும் சமாளிப்பார்கள்.

மேலிடத்தில் இருந்து நெருக்கடி அதிகரிக்கும். சுய தொழில் புரிவோருக்கு ஏற்றமும், இறக்கமும் இருக்கும். பெண்களுக்கு உற்சாகமான கால கட்டம். தெளிவான மனதுக்கு தியானம் செய்யுங்கள். தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டியிருக்கும். அண்டை வீட்டாருடன் இருந்த சலசலப்பு அகலும். மாணவர்கள் உயர்வைப் பெறுவார்கள். நிதானமாக செயல்பட வேண்டிய நேரம் இது. மாணவர்கள் கல்விக் கடன் பெறலாம். சந்தர்ப்பவாதிகளால் தொல்லை ஏற்படும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை காண்பீர். பூர்வீக சொத்தில் கிடைக்கும் வருமானம் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவும். உடல்நலனில் அக்கறை தேவை. அலைச்சல் காரணமாக சோர்வு அடிக்கடி உண்டாகும். சத்தான உணவு, முறையான ஓய்வு அவசியம். மருத்துவச் செலவும் ஏற்பட வாய்ப்புண்டு.

ரோகிணி: இந்த வாரம் சிலருக்கு சொத்தின் பேரில் கடன் பெறவும், சொத்துக்களை விற்கவும் நிர்ப்பந்தமான சூழ்நிலை உருவாகும். பிறர் பொருளை பாதுகாப்பது, ஜாமீன் கொடுப்பது போன்ற விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் சார்ந்த வகையில் தடைகளை எதிர்த்து போராட நேரிடும். எதிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் சிலருக்கு விரும்பாத வீடு, பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. உங்கள் மதிப்பு உயரும். தாய், தாய் வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்பு நீங்கும். பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் உங்கள் மேல் பாசமாக இருப்பர். உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். கவனம் தேவை.

பரிகாரம்: அஷ்ட லட்சுமிகளை வெண் தாமரை மலரால் அர்ச்சனை செய்ய நினைத்தது நடக்கும்.

மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் குரு(வ) – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் – பாக்கிய ஸ்தானத்தில் புதன், சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.

இதையும் படிக்க :  திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா யாக சாலை பூஜையுடன் தொடங்கியது

பலன்கள்: இந்த வாரம் அடிக்கடி உடல் நலம் பலகீனப்பட்டாலும் பின்பு சரியாகிவிடும். பண நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். ஆனால் கடைசி கட்டத்தில் சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். தடுமாற வைக்கும் சோதனைகள் கூட உங்களின் தெய்வ பக்தியால் பகலவனை கண்ட பனி போல் விலகி விடும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும், வாழ்க்கைத் துணையால் லாபங்கள் ஏற்படும். தந்தையின் உடன் பிறந்தோரால் நல்ல செய்தி கிடைக்கும். அரசாங்க வழியில் சகாயம் கிடைக்கும்.

புத்திரர்களால் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத தன லாபம் கிடைக்க வாய்ப்புண்டு. மனைவி வழி உறவுகளால் லாபங்கள் கிடைக்கும். அரசு வேலைக்குக் காத்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு பணியில் உதவிக்கரம் நீட்டுவார்கள். மேலிடத்தில் இருந்தும் மனதிற்கு இதமான செய்திகளே வந்து சேரும். தொழில் துறையினர் தைரியமாக புது தொழில்கள் ஆரம்பிக்கலாம்.

பொருளாதார உதவிகளும் கிடைக்கும். கூட்டுத் தொழில் புரிவோர்களுக்கு பார்ட்னர்கள் உங்களுடன் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். பெண்கள் ஆண்களிடம் கவனமாக இருப்பது நல்லது. அருகில் இருப்பவர்களானாலும் சரி, வேலை செய்யும் இடத்திலும் சரி, கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை கிடைக்கும். பாடங்கள் எளிதில் புரியும். எனவே அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர், பெற்றோரிடம் பாராட்டு பெறுவீர்கள்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் வாழ்க்கைத் துணையுடன் உரசல்கள் எழலாம். விட்டு கொடுத்து, அனுசரித்து போங்கள். வாகனங்களை கையாளும் போது கவனம் தேவை. வேகம் கூடவே கூடாது. தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும். வேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு அவார்டுகள் கிடைக்கலாம். எங்கு முதலீடு செய்வது என்பதனை தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று செய்யுங்கள்.

திருவாதிரை: இந்த வாரம் வியாபாரிகள் லாபத்தை தக்கவைத்துக் கொள்ள விடாமுயற்சி தேவைப்படும். அளவான உற்பத்தியில் சீரான லாபம் காண்பர். வெளியூர் பயணத்தை ஆதாய நோக்கில் மட்டும் மேற்கொள்வது நல்லது. தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் நிதானம், கடின உழைப்பு ஆகியவற்றைப் பின்பற்றுவது அவசியம்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் உத்தியோகஸ்தர்களுக்கு அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், பணிகளில் தாமத நிலையைச் சந்திப்பர். நிர்வாகத்தினரின் குறிப்பறிந்து செயல்படுவது அவசியம். இல்லாவிட்டால் மேலதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடும். எதிலும் கவனமுடன் செயல்படுவதால் நிலைமை சீராகும். சலுகை பெறுவதில் நிதானம் அவசியம்.

பரிகாரம்: பெருமாளுக்கு துளசி அர்ச்சனை செய்து வணங்க சிறப்பான பலன் கிடைக்கும்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇன்றைய ராசிபலன் @ 05 பிப்ரவரி 2026
Next Article ஜோதிட நாள்காட்டி 05.02.2026 | தை 22

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.