தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித்குமார்.
இவர் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து கார் ரேஸ்களில் அஜித்குமார் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் அஜித்குமார் திருப்பதி ஏழுமையலையான் கோவிலில் இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தார்.
கோவில் வளாகத்தில் நடந்து அஜித்குமாரை பார்த்து ரசிகர்கள் தல… தல… என கோஷம் எழுப்பிய நிலையில் இது கோவில் என கூறிய அஜித் செய்கை செய்தார்.
"Idhu Kovil.. Amaithiyaa irunga" 😁#AjithKumar pic.twitter.com/3lGk5R6SnT
— Trollywood 𝕏 (@TrollywoodX) October 28, 2025
கடந்த சில நாட்களுக்குமுன் கேரளாவில் உள்ள ஊட்டுகுளங்கர பகவதி அம்மன் கோவிலில் அஜித் குமார் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

