தெலுங்கு
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார். இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, யோகி பாபு, ஷாம், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி இத்திரைப்படத்தின் ‘ரஞ்சிதமே’ மற்றும் ‘தீ தளபதி’ பாடல்கள் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் தெலுங்கு டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
Sankranthi 2023 is going to be Massive 🔥🔥
Here are the Telugu Title posters of #Vaarasudu 🥁🥁#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman #BhushanKumar #KrishanKumar #ShivChanana @SVC_official @PVPCinema @TSeries pic.twitter.com/F6tpDb11V7
— Sri Venkateswara Creations (@SVC_official) December 18, 2022