விசிக தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், விசிக வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.
- கட்டுமன்னார்கோவில் – திருமாவளவன்
- செய்யூர் – சிந்தனைச் செல்வன்
- திருப்போரூர் – பன்னீர் தாஸ்
- பெரியகுளம் – ஆற்றல் அரசு
- பண்ருட்டி – அப்துல் ரகுமான்
- திண்டிவனம் – வன்னி அரசு
- அரக்கோணம் – எழில் கரோலின்
- கள்ளக்குறிச்சி – மாலதி
கடந்த முறை நாகை தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்ட சிலருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

