Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, August 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் பங்கு கோரிக்கை வெற்றுக் கூச்சல் – வைகோ தடாலடி பேச்சு

காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் பங்கு கோரிக்கை வெற்றுக் கூச்சல் – வைகோ தடாலடி பேச்சு

February 16, 20262 Mins Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஆட்சியில் பங்கு என்ற காங்கிரஸுன் கோரிக்கை வெறும் வெற்றுக் கூச்சலாகவே இருக்கும் என வைகோ விமர்சித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் சென்னையை அடுத்த ஶ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அதன்பிறகு, விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்த மத்திய அரசு, அதற்கு இந்தியாவில் செயல்பட தடை விதித்தது. இந்தத் தடை 1991ஆம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான தடையை கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு நீட்டித்தது. இதனையடுத்து, தமிழ் ஈழம் தொடர்பாக விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டை சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றாத நிலையில், தொடரும் தடை நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த 2013ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டு தொடரப்பட்டு நிலுவையில் இருந்த இந்த வழக்கு, நீதிபதிகள் அனிதா சுமந்த், மும்மினேனி சுதிர் குமார் அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜரான நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பில், மூத்த வழக்கறிஞர் காணொலியில் ஆஜராகி வாதம் செய்ய தயாராக இருப்பதாகவும் அதற்காக வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிக்க :  பல்கலைக் கழகத்தில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டும் - அமைச்சர் பொன்முடி!

அப்போது வைகோ, வழக்கை வரும் 26ஆம் தேதி இறுதி விசாரணைக்கு ஒத்திவைக்க வேண்டும் என தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை பிப்ரவரி 26 பிற்பகல் 2.15 மணிக்கு இறுதி விசாரணைக்காக ஒத்திவைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ”தமிழ் ஈழ விடுதலை புலிகள் மீதான தடையை மத்திய அரசு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டித்தது.

பின்னர், 2 ஆண்டுகள் தடையை 5 ஆண்டுகளாக அதிகரித்ததை எதிர்த்து, 2013ஆம் ஆண்டு நான் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். டெல்லியில் உள்ள தீர்ப்பாயத்திலும் ஆஜராகி தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறேன்” என்றார். வந்தே மாதரம் பாடல் குறித்து பேசிய வைகோ, ”வந்தே மாதரம் பாடலில் உள்ள வரிகளில், சில வரிகள் பிற மதத்தவர்களுக்கு எதிராக உள்ளது. அதில் இந்து மதத்தை ஏற்பதாக உள்ளதை அவர்கள் எப்படி ஏற்பார்கள். இதனால், மத நல்லிணக்கம் பாதிக்கப்படும்.

இதையும் படிக்க :  மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணியை மேற்கொள்ளக்கூடாது - உயர்நிதிமன்றம்

மத்திய அரசு சனாதன இந்து தர்மத்தை சிறுபான்மை மக்கள் மீது திணிக்க முயற்சிக்கின்றனர். ஆங்கிலேயர்களிடம் கோரிக்கை வைத்த தேச துரோகி சாவர்க்கர் படத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திறந்து வைத்துள்ளது. ஆனால், சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படம் திறக்கப்படாததை எதிர்த்து நடத்தப்பட்ட நீண்ட போராட்டத்துக்கு பிறகு, அவரது அம்கேத்கரின் புகைப்படம் நாடாளுமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா வளர்த்த திராவிடத்தை அடியோடு அழிப்போம் என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். பாரதியாரின் பாடல்களை தமிழ் பேசுவதாக பிரதமர் வேசம் போட்டு வருகிறார்” என கூறினார்.

சட்டமன்ற தேர்தல் குறித்து பேசுகையில், “வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும். மதிமுக அதற்கு உறுதுணையாக இருக்கும். காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி என்பது தவிடு பொடியாகும். நடிகை குறித்து பேச்சை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தவிர்த்திருக்க வேண்டும். திமுக ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை வெறும் வெற்றுக் கூச்சலாகவே இருக்கும்” என தெரிவித்தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“டிஜிபியை நியமிக்காத அரசு எப்படி சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும்?” – நயினார் நாகேந்திரன்
Next Article ABC ஜூஸ் குடித்தும் பயனில்லையா? இனிமே இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,917 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,151 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,104 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,917 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,151 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,104 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.