அறிவியல்உலகம்

விருதுகளின் மணிமகுடம் – நோபல் விருதின் கதை!

கடுமையான உழைப்பிற்கு கொடுக்கப்படும் பெரிய வெகுமதி ‘அங்கீகாரம்’. அதற்காகத்தான் விருதுகளும் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. உலகில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த விருதுகளில் முதன்மையானதாக இருப்பது நோபல் விருது. Alfred Nobel என்பவரது உருவம் பொறிக்கப்பட்டிருக்கும் பதக்கமும், வெகுமதியும் நோபல் பரிசினை வெல்பவர்களுக்கு கொடுக்கப்படும்.

 

Alfred Nobel என்பவர் டயனமைட் என்ற வெடிபொருளை கண்டுபிடித்தவர். அதன் மூலமாக அவருக்கு ஏராளமான வருமானம் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. அதனை தவிர்த்து அவர் சிந்தடிக் ரப்பர், ஆர்டிபிசியல் சில்க், சிந்தடிக் லெதர் போன்றவற்றை கண்டுபிடிப்பதிலும் பங்காற்றியிருக்கிறார். கிட்டதட்ட 350 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை வைத்திருந்தவர்.

Alfred Nobel இறக்கும் போது அவரிடமிருந்த 9 மில்லியன் பணத்தினை வைத்து, மனிதர்களுக்கு பயன்படக்கூடியவற்றை கண்டுபிடிப்போருக்கும், அமைதிக்காக பாடுபடுபவர்களுக்கும் விருதினை அளிக்கவேண்டும் என முடிவு செய்தார். முதன்முதலாக, அவர் பெயரிலேயே 5 பிரிவுகளில் நோபல் விருதுகள் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி இலக்கியம் , வேதியியல் , இயற்பியல் , அமைதி , மருத்துவம் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்படுவோருக்கு நோபல் விருதும் பண முடிப்பும் பரிசாக தரப்படும் என முடிவுசெய்யப்பட்டது.

ஒரு துறையில் ஒருவருக்கோ அல்லது இவருக்கோ அல்லது மூவருக்கோ அதிகபட்சமாக நோபல் விருது வழங்கப்படும். இருவருக்கு வழங்கப்படும்போது விருதுக்கான பணத்தினை சமமாக பகிர்ந்துகொள்ளலாம் . மூவருக்கு வழங்கப்படும்போது சரிபாதி ஒருவருக்கும், மற்றொரு பாதியை பகிர்ந்து மற்ற இருவரும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆரம்பத்தில் ஐந்து துறைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுவந்த நோபல் விருதானது Sweden’s central bank Sveriges Riksbank இன் பங்களிப்பினால் பொருளாதார அறிவியலுக்கும் 1968 க்கு பிறகு வழங்கப்பட்டு வருகிறது.

அமைதிக்காக போராடுகிறவர்களுக்கும் நோபல் விருது கொடுக்கப்படுகின்றது. டயனமைட் வெடிபொருளை கண்டறிந்தவர் அமைதிக்கான விருதினை ஏற்படுத்தி கொடுத்தது பெரும்பாலானவர்களால் ஆச்சரியமாக பார்க்கப்படுகின்றது.

ஆனால், Alfred Nobel டயனமைட் வெடிபொருளை ஆக்கபூர்வத்திற்க்காகவே உருவாக்கியதாக கூறுகிறார்கள், அவரை அறிந்தவர்கள்.

பல துறைகளில் மனித வாழ்விற்கு உபயோகமான எண்ணற்ற கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டாலும் குறிப்பிட்ட துறைகளுக்கு மட்டுமே நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதனால், மற்ற துறைகளில் இயங்குவோருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடுகிறது.

உதாரணத்திற்கு நில நடுக்கம் வரப்போவதை முன்கூட்டியே அறியக்கூடிய கருவியை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. மனிதர்களுக்கு பயன்படும் விதத்திலான கண்டுபிடிப்பாக இருக்கவேண்டும் என்ற Alfred Nobel அவர்களின் அடிப்படை கூற்றை இக்கண்டுபிடிப்பு நிறைவேற்றி இருந்தாலும்,

Earth Science துறைக்கு நோபல் விருது வழங்கப்படுவதில்லை என்ற காரணத்திற்காக இதுபோன்ற விஞ்ஞானிகள் நோபல் விருதினை பெற இயலவில்லை.

ஒரு கண்டுப்பிடிப்பை நோக்கி பலர் முயற்சிசெய்து வெற்றியடையும்போது, யாருக்கு விருது கொடுப்பது என்கிற குழப்பம் நேர்ந்தாலோ அல்லது அதிகபட்சமாக மூன்று நபருக்குத்தான் வழங்கப்பட முடியும் என்கிற நிபந்தனைக்குள் வரவில்லை என்றாலோ நோபல் விருதினை வாங்க இயலாது.